விழுப்புரம் வளவனூர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2457 days ago
விழுப்புரம்: வளவனூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நாளை (31ம் தேதி) நடக்கிறது. விழுப்புரம் அடுத்த வளவனூர் அக்ரஹாரத்தில், வேதவல்லி சமேத லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் மாதந்தோறும், திருவோணம் நட்சத்திரத்தன்று, சுவாமிக்கு திருக்கல் யாண உற்சவம் நடக்கும். இம்மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளை (31ம் தேதி) வருகிறது. இதை முன்னிட்டு, நாளை மதியம் 1:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை 5:00 மணியளவில் வீதியுலா நடக்கிறது.கோவில் அறங்காவலர் ஆராவமுதன் கூறும்போது, திருமணம் ஆகாதோர் திருவோணம் நட்சத்திரத்தன்று நடக்கும் திருக்கல்யாண வைபவத்தில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சுவாமியின் அனுகிரகம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்றார்.