அவலூர்பேட்டையில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :2388 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டை காளி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று முன்தினம் (மார்ச்., 28ல்) மாலை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.