உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்: 3 மணி நேரம் காத்திருப்பு

பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்: 3 மணி நேரம் காத்திருப்பு

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு பங்குனி உத்திர விழா முடிந்த பின்னரும், சனி, ஞாயிறு தினங்களில் வெளி மாவட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக தீர்த்தக்காவடிகள் உடன் அதிகமாக வருகின்றனர். நேற்று ஞாயிறுவிடுமுறை, சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு அடிவாரம் திருஆவினன்குடி கோயில், மண்டபங்களில் ஏராளமான திருமணங்கள், காதணிவிழா நிகழ்ச்சிகள் நடந்தது. மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள், ரோப்கார், வின்ச் ஸ்டஷேனில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தினர். பொது தரிசன வழியில் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். தங்கரதப் புறப்பாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !