தர்மபுரியில் மழை வேண்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
ADDED :2449 days ago
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிபேட்டை மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி திருவாசம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று (மார்ச்., 31ல்) நடந்தது. மாணிக்கவாசகர் பன்னிரு திருமுறை மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பொறுப்பாளர்கள் பழனிசாமி - புனிதவதி ஆகியோர் தலைமை வகித்தனர். அப்போது, சிவகாமி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி சிலைக்கு அலங்காரத்துடன், சிவனடியார் கள் மலர் தூவி, மழை வேண்டியும், அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியும், திருவாசகம் ஓதினர். நிகழ்ச்சியில் சிவனடியார்கள், பெண் பக்தர்கள் உள்பட பலர், பங்கேற்றனர். நேற்று (மார்ச்., 31ல்) காலை, 9:30 மணிக்கு துவங்கி, மாலை, 6:00 மணி வரை நடந்தது. ஏற்பாடுகளை, சிவனடியார் குழுவினர் செய்திருந்தனர்.