உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை திரவுபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானை திரவுபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானை: திருவாடானை திரவுபதி அம்மன் கோயில் திருவிழா மார்ச் 27 ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரவுபதி அம்மன், அர்ச்சுனன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் மாலை 7:00 மணிக்கு நடந்தது. திரவுபதி, அர்ச்சுனன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பின்பு நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாளை (ஏப்.3) காளி வேடமும், மறுநாள் திரவுபதி அம்மன் வேடமும், 5 ந் தேதி பூக்குழி விழாவும் அன்று இரவு திரவுபதிஅம்மன் வீதி உலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !