உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் தடுப்பணை: உயர்நீதிமன்றம் கேள்வி

சதுரகிரி மலையில் தடுப்பணை: உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை : தூத்துக்குடி ராதா கிருஷ்ணன், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் விழாக்களில் பக்தர்கள் வருகின்றனர்.

குடிநீர், போலீஸ் பாதுகாப்பு, மருத்துவ உதவி, தங்குமிடம், போக்குவரத்து, தீயணைப்பு வசதிகள் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சுரேஷ்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்திற்குட்பட்ட வனப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் உள்ளன. வனத்தை பாதுகாக்க விதிமீறல் கட்டடங்களை அகற்ற வேண்டும்.

போர்வெல்கள், கிணறுகள் அமைக்க தடை விதிக்க வேண்டும், என மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு,வனத்தில் தடுப்பணைகள், செயற்கை ஏரி அமைக்கும் சாத்தியம் மற்றும் திட்டம் உள்ளதா என வனத்துறை ஏப்.,12 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !