கிணத்துக்கடவு சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :2399 days ago
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சிவாலயங்களில் நேற்று (ஏப்., 2ல்), பிரதோஷ வழிபாடு நடந்தது.
கிணத்துக்கடவு புற்றிடங்கொண்டீசர் கோவிலில், நேற்று மாலை, 4:00 மணிக்கு நந்திக்கும், பிரதோஷ மூர்த்திக்கும் சிறப்பு, அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது.வழிபாட்டுக்கு பின், பிரதோஷ மூர்த்தி சப்ரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித் தார். இதேபோன்று, பொன்மலை வேலாயுதசுவாமி மற்றும் பெரியகளந்தை ஆதீஸ்வரன், அரசம்பாளையம் சிவன் கோவில்களில் நேற்று (ஏப்., 2ல்) மாலை, பிரதோஷ வழிபாடு சிறப்பு பூஜை நடந்தது.