உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

திருச்சி:  பங்குனி உற்சவத்தை முன்னிட்டு, திருச்சி திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

பஞ்சபூத தலங்களில், நீர் தலமான திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில், தேர் திருவிழா மார்.,31ம் தேதி எட்டு திக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்மன் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் பெரியதேரிலும், அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.  இதில், ஏராளமான பக்தர்கள் தேரின் வடகயிரை பிடித்து இழுக்க, ஜம்புகேஸ்வரர் தேர் ஆடி அசைந்து வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !