உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சத்திரம்:மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் மாதம் தோறும் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம்.

இந்த மாதம் ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் (ஏப்., 4ல்) நடந்தது. அன்று மாலை 6.00 மணிக்கு பால், தயிர், நெய், குங்குமம், தேன் ஆகியவற்றால் அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதேபோல் பூவாலை அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !