திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2471 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு மணக்கோலத்தில் தீர்த்தீஸ்வரர் தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, மார்ச்., 30ல் கொடியேற்றம் நடைபெற்றது. 12 நாட்களுக்கு நடைபெறும் விழாவில் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெற்றது. நேற்று (6ம் தேதி) திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. மணக்கோலத்தில் தீர்த்தீஸ்வரர் தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை ராவனேஸ்வர வாகன உற்சவம் நடக்கிறது.