வந்தவாசி கிணற்றை தூர்வாரிய போது விநாயகர் சிலை கண்டெடுப்பு
ADDED :2453 days ago
வந்தவாசி: வந்தவாசி அருகே கிணற்றை தூர்வாரிய போது, விநாயகர் கல் சிலை கண்டு எடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நெற்குணம் மதுரா வயலாமூர் கிராமத்தில், பொது கிணற்றை தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் நேற்று (ஏப்., 7ல்) ஈடுபட்டனர்.
அப்போது, விநாயகர் கல் சிலை ஒன்றும், கல்லால் ஆன பலிபீடம் ஒன்றும் கிணற்றுக்குள் மண்ணில் புதைந்திருந்ததை தோண்டி எடுத்தனர். விநாயகர் சிலை இரண்டு அடி உயரத்தில் சேதமடைந்த நிலையில் இருந்தது. பலிபீடம் முக்கால் அடி உயரமும் இருந்தது. வருவாய் ஆய்வாளர் மலர்விழி, வி.ஏ.ஓ.., கோவிந்தராஜ் ஆகியோர் சிலைகளை மீட்டு, வந்தவாசி தாசில்தார் அரிக்குமாரிடம் ஒப்படைத்தனர்.