நாமக்கல் துலுக்க சூடாமணி கோவிலில் வரும் 10ல் தேர்த்திருவிழா
ADDED :2407 days ago
நாமக்கல்: ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டியில், துலுக்கசூடாமணியம்மன் கோவில் உள்ளது. நடப்பாண்டு பங்குனி திருவிழா நேற்று(ஏப்., 7ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு அன்னவாகனம். சிம்மவாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் எழுந்தருளுகிறார். வரும், 10ல் காலை, 10:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 11ல் காலை, 9:30 மணிக்கு புஷ்ப பல்லக்கு மற்றும் சப்தாபரணம் நடக்கிறது.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற முகாம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சுரேஷ்குமார் செய்து வருகிறார்.