பாப்பாரப்பட்டி மாதேஸ்வரன் கோவிலில் யுகாதி திருவிழா
ADDED :2403 days ago
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே வத்திமரதஹள்ளியில் உள்ள, சின்னமலை மாதேஸ்வரன் கோவிலில் யுகாதி திருவிழா, ஐந்து நாட்கள் நடந்தது. இக்கோவிலில் யுகாதி திருவிழா கடந்த, 2ல் துவங்கியது. 3ல் நரி வாகனத்தில் சுவாமி வலம் வருதல் நடந்தது. இதையடுத்து, 4 மற்றும் 5ல் அபிஷேக ஆராதனை, 1008 அர்ச்சனை பூஜைகள், அன்னதானம் நடந்தது.
இறுதிநாளான, 6 இரவு, 9:00 மணிக்கு மின்அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலா நடந்தது. நிகழ்ச்சிகளில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். மாதேஸ்வரன் கோவில் சேவ அறக்கட்டளை சார்பில் நான்கு நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.