உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

குன்னூர் : குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத் துடன் துவங்கியது.ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள ராமர் கோவிலில் இருந்து சிறப்பு வழிபாடுகளுடன் கொடி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தந்திமாரியம்மன் கோவிலில் ஏற்றப்பட்டது.

முன்னதாக காப்பு கட்டப்பட்டது. திருப்பூச்சாற்று நடந்தது. நேற்று (ஏப்., 7ல்)கரக ஊர்வலம் நடந்தது.9ம் தேதி திருக்கல்யாண உற்சவம், அக்னிசட்டி ஊர்வலம், வேப்பமர வாகனத்தில் அம்மன் புறப்பாடு, கரக ஊர்வலம் ஆகியவை நடக்கின்றன. 14ம் தேதி பூகுண்டம், 16ம் தேதி பகல், 12:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 17ல், 92வது ஆண்டு பரிவேட்டை, 19ல் முத்துபல்லக்கு, 20ல் புஷ்ப பல்லக்கு நடக்கிறது.

தொடர்ந்து, புலி, ஆதிசேஷன், புஷ்பரதம், முத்து ரதம், தாமரை, மயில், யானை உட்பட பல்வேறு வாகனங்களில் தினமும் அம்மன் சிறப்பு அலங்காரங்களில் பவனி வருகிறார். மே மாதம், 10 பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறையினர், ஆன்மிக அமைப்பினர், பக்தர்கள் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !