தொட்டிச்சி அம்மன் கோயில் திருவிழா
ADDED :2529 days ago
மேலுார்: மேலுார் சொக்கம்பட்டி தொட்டிச்சி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. எல்லா வளமும் கிடைக்க வேண்டி பக்தர்கள் மேலுார் மெயின் ரோட்டில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மேலுார், சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.