சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் திருவிழா
ADDED :2737 days ago
சோழவந்தான்:சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசிதோறும் 17 நாட்கள் விழா நடக்கும். நேற்று (ஏப்., 8ல்) முன் தினம் இரவு கொடியேற்றம் நடந்தது. முன்னதாக பக்தர் கள் பின்தொடர பூஜாரி சண்முகம் கொடியுடன் ரத வீதி சுற்றி ஊர்வலம் வந்தார்.முக்கிய நிகழ்வாக ஜூன் 18ல் பால்குடம், அக்னிசட்டி, 19ல் பூக்குழி, 25ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சுசீலராணி, ஊழியர்கள் செய்து வருகின்றனர்.