திருத்தணியில் கிருஷ்ணர் உற்சவம்
ADDED :2735 days ago
திருத்தணி:திருத்தணி -- அரக்கோணம் சாலை, சுப்ரமணியபுரம் பகுதியில், கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழா நேற்று (ஏப்.,9ல்) நடந்தது.
இதில், உற்சவர் கிருஷ்ணருக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்ற அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதைத் தொடர்ந்து, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. அதன் பின் நடந்த கல்யாண மாலை பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.