மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
2340 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
2340 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
2340 days ago
நாமகிரிப்பேட்டை: சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில், சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.நாமகிரிப்பேட்டை அடுத்த, சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் பண்டிகை கடந்த வாரம், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று இரவு, பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வலம் வந்தனர். பின்னர், பூச்சட்டியில் இருந்த நெருப்பை கோவில் முன் கொட்டியவுடன், பக்தர்கள் அதை திருநீறாக எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர். தொடர்ந்து, சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறினாலும் அல்லது ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் நினைத்துக்கொண்டும், பூசாரி முன் வந்து கையை தூக்கி வரிசையாக நிற்கின்றனர். சாட்டையுடன் நிற்கும் பூசாரி, அருள் வந்து பக்தர்களை அடிக்கிறார். ஒவ்வொருவராக வரும் பக்தர்கள், கையை உயர்த்தி நடனமாடிக் கொண்டே சாட்டையடி வாங்கிச் செல்கின்றனர். இந்த விநோத பழக்கம், பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறது.இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: தங்கள் பிரார்த்தனை நிறைவேறினால், சாட்டையடி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மேலும், சாட்டையடி வாங்கினால் தீமை விலகி, நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் குழந்தைகள், பெண்கள் பெரியவர்கள் என அனைவரும் வேண்டுதல் இல்லை என்றாலும் பூசாரி கையால் சாட்டையடி வாங்கிக் கொள்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். மதியம், 100 பால்குட, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு பொங்கல் வைத்தல், அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. நாளை சத்தாபரணம், 13ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா முடிகிறது.
2340 days ago
2340 days ago
2340 days ago