உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபப்படாதவனே நிஜ வீரன்!

கோபப்படாதவனே நிஜ வீரன்!

நபிகள்நாயகம்(ஸல்) அவர்களுக்கு முகவுகிஸ் என்ற எகிப்துநாட்டு மன்னர் ஏராளமான பொருட்களை அன்பளிப்பாக அனுப்பிவைத்தார். அவற்றை ஒரு மருத்துவர் கொண்டு வந்தார். வந்தவர் மெதினா நகரத்தில் பல நாட்களாக தங்கியிருந்தார். ஆனால், மக்களில் ஒருவர் கூட, அவரிடம் வைத்தியம் பார்க்கவரவில்லை. ஆச்சர்யப்பட்டார் மருத்துவர். நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் தனது சந்தேகத்தை கேட்டார்.“உங்கள் ஊரில் ஒருவருக்கு கூட நோய் வராதோ?” என்றார். உடனே நாயகம்(ஸல்) அவர்கள் அவரிடம், “நாங்கள் அல்லாஹ்வின் அருளால் எவ்வித நோயும் இல்லாமல் இருக்கிறோம். எனவே உங்களது சேவை எங்களுக்கு தேவையில்லாமல் போய்விட்டது. நாங்கள் புனித நுõலான குர்ஆன் சொல்வது போல், பசித்த பிறகே சாப்பிடுவோம். எங்கள் மக்கள் குறைவாகவே சாப்பிடுவார்கள். எனவே நோய் எங்களுக்கு அதிகமாக வருவதில்லை,” என்றார்.

தன்னை வெளியூர்க்காரன் என நினைத்து, நம்பிக்கை இல்லாமல் தன்னிடம் வைத்தியம் பார்க்க ஊர்மக்கள் வரவில்லையோ என நினைத்துக் கொண்டிருந்தமருத்துவர், நாயகம்(ஸல்) அவர்களின் பதிலைக் கேட்டு தெளிவடைந்தார், நாயகத்தின் காலத்தில் பசித்த பிறகே மக்கள் சாப்பிட்டனர். குழந்தைகளுக்கு தாய்மார்கள் இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் கொடுத்தனர். மேலும் சிரித்த முகத்துடன் வாழ்ந்தால் நோய் என்பதே அண்டாது என்பதையும் நாயகத்தின் வரலாறு நமக்கு தெளிவாக தெரியவைக்கிறது. கோபம் வரும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே, உலகத்தில் சிறந்த வீரர் என்பதும் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !