பயப்படாதே! நான் இருக்கிறேன்!
பயப்படாதே! நான் இருக்கிறேன்!பயம் என்ற பதத்தின் பொருள் பயங்கரம் அல்லது திகில். சவுல் பொறாமையின் காரணமாய் தாவீதை கொல்வதற்கு திட்டமிட்டான். தாவீது பெலிஸ்தியர்களின் தேசத்திற்கு தப்பி ஓடினான். அங்கு சிறைப்பிடிக்கப்பட்டான். கோலியாத்தை கொன்ற தங்கள் எதிரியான தாவீதை பெலிஸ்தியர்கள் இனம் கண்டுகொண்டபடியால், அபிமெலேக்கு (ஆகீஸ் ராஜா) முன் இழுத்துச் சென்றனர். தன்னை அவன் கொல்லக்கூடாது என்பதற்காக, தாவீது புத்தி சுவாதீனம் அற்றவனைப் போல நடித்தான், அபிமெலேக்கு இரக்கப்பட்டு அவனை துரத்திவிட்டான். தாவீது ஒரு குகையில் மறைந்து வாழ்ந்தான். இந்நிலையில் தாவீது சொல்கிறார், “நான் கர்த்தரை தேடினேன், அவர் எனக்கு செவி கொடுத்து, என்னுடைய எல்லாப்பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார் (சங்34:4)” என்று கூறுகிறார்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேடி வரும் போது நம்முடைய பயங்களை மாற்ற அவர் போதுமானவராயிருக்கிறார்.