உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கடலாடி:- கடலாடியில் உள்ள நல்ல காமாட்சியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று காலை நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் சேத்தாண்டி வேடமணிந்து வலம் வந்தனர். கடலாடியில் உள்ள ஊரணிக்கு சென்று உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு, மாலையணிந்தபடி வீதிகளில் வலம் வந்து காமாட்சியம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூறுகையில், ஆண்டிற்கு ஒருமுறை பங்குனி விழாவில் உடல் முழுவதும் சேறு பூசிக்கொள்வதால், நோய் நொடி, தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், உடல் உபாதைகள் நம்மை அணுகாது என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர். மாலையில் விளையாட்டு, கோலப்போட்டிகள், பூச்சொரிதல் விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !