அருப்புக்கோட்டை கோயிலில் அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக்கடன்
ADDED :2406 days ago
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
இக்கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் பொங்கல் விழா நடந்தது. நேற்று காலை முதல் இரவு வரை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.ஒன்று ,21,51,101 எனஅக்னி சட்டிகள், அலகில் வேல் குத்தியும், பறவை காவடி என ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். சிறுவர்கள் வெள்ளை,கருப்பு கலரில் பொட்டு வைத்து ஆஹா.. அய்யாகோ என்ற பக்தி கோஷமிட்டப்படி சென்றனர். ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.