பரங்கிப்பேட்டை விநாயகர் கோவிலில் பால்குட திருவிழா
ADDED :2486 days ago
பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை மெயின்ரோடு செல்வ விநாயகர் கோவிலில் நடந்த பால்குட திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பரங்கிப்பேட்டை மெயின்ரோடு செல்வ விநாயகர் கோவிலில் நான்காம் ஆண்டுபால்குட திருவிழா நடந்தது.அதையொட்டி, செல்வ விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஏராளமானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.