புதுச்சத்திரம் பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2702 days ago
புதுச்சத்திரம்:பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் (ஏப்., 9ல்) இரவு 8.00 மணிக்கு, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு
அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, திருத்தேரில் எழுந்தருள செய்யப்பட்டார்.இரவு 10.00 மணிக்கு பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது.