உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாதர் கோயிலில் குரு பூஜை விழா

ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாதர் கோயிலில் குரு பூஜை விழா

ராஜபாளையம்:ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாதர் கோயிலில் குருபூஜை விழா நடந்தது.

இதைமுன்னிட்டு குருநாத சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு தீபாராதனை வழிபாடு நடைபெற்றது. பரிகார தெய்வங்களான விநாயகர், அய்யப்பன், ஆதிநாராயண சுவாமி,
பாலசுப்பிரமணியர்க்கு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.

வழிபாட்டிற்கு பின் மதியம் 11: 30 மணிக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சுவாமியை தரிசித்தனர்.ஏற்பாடுகளை தலைவர் சந்திரசேகர பாண்டியன், உப தலைவர் சீனிவாசன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !