உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுமுடி வெற்றிவேல் முருகன் கோவில் கும்பாபிஷேகம்

கொடுமுடி வெற்றிவேல் முருகன் கோவில் கும்பாபிஷேகம்

கொடுமுடி: கொடுமுடி அருகே, வடக்கு மூர்த்தி பாளையத்தில் வெற்றி வேல்முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (ஏப்., 10ல்) காலை நடந்தது. கடந்த, 7ல் மாலை, 6:00 மணிக்கு கணபதி வழிபாடு நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 8 ல் காலை கோமாதா பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம் நடந்தது. நேற்று (ஏப்., 10ல்) காலை, 9:00 மணிக்கு

அருட்சக்தி கலசங்கள் புறப்பாடும், 9:30 மணிக்கு விமான கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம், திருக்குட நன்னீராட்டு, மூலவர் வெற்றிவேல் முருகனுக்கு கும்பாபிஷேகம், அபிஷேகம்
நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !