ஜெனகை நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :2404 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் பங்குனி பிரமோத்ஸவ விழாவில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. உபயதாரர் சவுந்தரியம்மாள், லலிதா தலைமையில் திருமண சீர்வரிசையுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் சப்பரங்களில் பூதேவி, ஸ்ரீதேவியர் சுவாமி உலா வந்து கோயில் மண்டபத்தில் எழுந்தருளினர். பின் ரகுராம்பட்டர், வரதராஜ பண்டிட் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுசீலாராணி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.