அன்னூரில் திருவாசகம் வாசித்தால் மனதில் அமைதி பிறக்கும்
ADDED :2478 days ago
அன்னூர்: அன்னூரில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று (ஏப்., 11ல்) நடந்தது.சிவனடியார் கூட்டம் சார்பில், ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நாளில், அன்னூர், மன்னீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடக்கிறது.
இந்த மாத நிகழ்வு நேற்று (ஏப்., 11ல்) காலை 6:45 மணிக்கு மன்னீஸ்வரர் கோவிலில் துவங்கியது. திரளான சிவனடியார்கள் திருவாசகம் வாசித்தனர்.சிவனடியார் நாமகிரி பேசுகையில், திருவாச கம் வாசித்தால், மனதில் அமைதி பிறக்கும். இறைவன், மனம், பிறவி குறித்தும், நிலையானது, நிலையற்றது குறித்தும் தெளிவு பிறக்கும். அகந்தையை விட்டு, மனதில் அன்பை வைத்து, இறைவனிடம் சரணாகதி அடைய வேண்டும், என்றார்.மதியம் 1:00 மணிக்கு முற்றோதல் நிறைவு பெற்றது. அன்னூர், அவிநாசி, புளியம்பட்டி பகுதியிலிருந்து சிவனடியார்கள் பங்கேற்றனர்.