சாத்தூர் வெங்கடாசலபதி கோயில் திருக்கல்யாணம்
ADDED :5062 days ago
சாத்தூர் : சாத்தூர் வெங்கடாசலபதி திருக்கோயிலில் ஸ்ரீனிவாசா திருக்கல்யாணம் நேற்று காலை நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவிக்கு சுவாமி, திருமாங்கல்யம் அணிவிக்க, நடந்த திருக்கல்யாணத்தில், ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் டெய்சிராணி, துணைத் தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய தலைவர் வேலாயுதம், துணைத்தலைவர் செல்வராணி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் கருடாழ்வார் வாகனத்தில், பூதேவி, ஸ்ரீதேவியுடன் சுவாமி மாடவீதிகள், ரதவீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சுவர்ணாம்பாள், கோவில் தக்கார் பூவலிங்கம் செய்திருந்தனர்.