உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஸ்ரீகருமாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

திருப்பூர் ஸ்ரீகருமாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, பூலவாரி சுகுமார் நகரில் உள்ள, ஸ்ரீகருமாரியம்மன் கோவிலில், 33ம் ஆண்டு பூச்சாட்டு பொங்கல் விழா நடந்தது.கடந்த, 4ம் தேதி, கிராம சாந்தியும், 7ம் தேதி விநாயகர் பொங்கல், கணபதி ஹோமம், காப்புகட்டுதல், பூச்சாட்டு நிகழ்ச்சிகளும் நடந்தன. இரவு கம்பம் நடப்பட்டது.

கடந்த, 8 ம் தேதி முதல் தினமும் அபிஷேக பூஜை, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.நேற்று (ஏப்., 11ல்), காலை 6:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. உச்சி பூஜையை தொடர்ந்து, பூவோடு ஊர்வலம் நடந்தது. இன்று (ஏப்., 12ல்), மஞ்சள் நீராட்டு ஊர்வலமும், சிறுவர் -சிறுமியர் நடன நிகழ்ச்சிகளும், நாளை மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !