உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் பச்சைவாழியம்மன் கோவிலில் கொடியேற்று விழா

கடலூர் பச்சைவாழியம்மன் கோவிலில் கொடியேற்று விழா

கடலூர்: கடலூர் அடுத்த பிள்ளையார்மேடு கன்னியக் கோவில் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா, நாளை 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

விழாவையொட்டி, நாளை காலை 9:00 மணிக்கு மகா கணபதி ஹோமமும், காலை 11:00 மணிக்குமேல் 12:00 மணிக்குள் ஆகம முறைப்படி கொடியேற்றுதல் நடக்கிறது.
இதை தொடர்ந்து, வரும் 27ம் தேதி முதல் மே மாதம் 4ம் தேதி வரை, சுவாமி வீதியுலா நடக்கிறது.இதையடுத்து, வரும் 3ம் தேதி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு மகா சிறப்பு
அபிஷேகமும், காலை 10:00 மணிக்கு சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது,ஏற்பாடுகளை கிராம
பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !