சிதம்பரம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் ராம நவமி விழா
ADDED :2403 days ago
கடலூர்:சிதம்பரம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் வாசவி மகாலில் நாளை (13 ம் தேதி) ராம நவமி பெருவிழா காணும் வைபவம் நடக்கிறது.சிதம்பரம் மேலரத வீதியில் அமைந்துள்ள
கன்னிகா பரமேஸ்வரி கோவில் வாசவி மகாலில் நாளை (ஏப்., 13ல்) மாலை 5.50 மணிக்கு சீத்தா ராமர் திருக்கல்யாணமும், தாயார் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.
பின்னர் இரவு 7 மணிக்கு மேல் ராஜகோபாலசுவாமி கோமாதாவுடன் வீதியுலா காட்சி நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆனந்த செல்வக்கண்ணன் மற்றும் சிதம்பரம் இறை தொண்டர்கள் செய்து வருகின்றனர்.