உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் பெருமாள் கோவில் சுவர் இடிந்ததால் அதிர்ச்சி

திருக்கோவிலூர் பெருமாள் கோவில் சுவர் இடிந்ததால் அதிர்ச்சி

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் சுவர் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரதராஜ பெரு மாள் கோவில் உள்ளது. பழமையான கோவிலை புனரமைத்து, திருப்பணி செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (ஏப்., 11ல்) காலை 11:15 மணியளவில் உள்பிரகாரத்தின், வடக்கு பக்க கோவில் சுவர் திடீரென சரிந்து விழுந்தது. கோவில் நடை சாத்தப்பட்டு இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மூலஸ்தானத்துக்கு முன்பாக இருக்கும் உள் பிரகாரத்தின் வடக்குப் பகுதி கருங்கல் சுவர் 35 அடி தூரத்திற்கு சரிந்து விழுந்திருந்ததை கண்டு
பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் சிலைகள் மூலஸ்தானத்தில் பாதுகாப்பாக இருந்தாலும், உடனடியாக சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !