பழமையான அவனாசி ஈஸ்வரன் கோயில் புனரமைப்பு சிறப்பு யாகம்
ADDED :5002 days ago
தேவாரம் :தேவாரத்தில் பழமையான அவனாசிஈஸ்வரன் கோயில் உள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைகழக பேராசிரியர் பவுன்துரை குழுவினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். 5ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் கூன்பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட விபரம், கோயில் கல்வெட்டுகளில் உள்ள பிராமி எழுத்துகள் மூலம் அறியப்பட்டது. சிதலைடைந்துள்ள கோயிலை புனரமைக்க தெய்வீகப்பேரவை தலைவர் நாகராஜன் தலைமையிலான குழு நடவடிக்கை எடுத்தது. பொதுமக்கள் பங்களிப்புடன் கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. புனரமைக்க உள்ள தடைகள் நீங்க தோஷநிவர்த்தி யாகம் கேரள பணிக்கர் மூலம் நடத்தப்பட்டது. தெய்வீகப்பேரவை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.