உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை பிடாரியம்மன் கோவில் தேரோட்டம்

குளித்தலை பிடாரியம்மன் கோவில் தேரோட்டம்

குளித்தலை: ஆர்.டி.மலை பிடாரியம்மன் கோவில் திருவிழாவில், தேரோட்டம் நடந்தது. குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலையில், பிடாரி அம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் (ஏப்., 11ல்) நடந்தது. கடந்த, 7ல், பக்தர்கள், காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கடந்த, 8ல், பொங்கல், மாவிளக்கு, கிடாவெட்டு, கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அடுத்த நாள் இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது.  நேற்று முன்தினம் (ஏப்., 11ல்) மாலை, தேரோட்டம் நடந்தது.

இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று (ஏப்., 12ல்) காலை, மஞ்சள் நீராட்டத்துடன், திருவிழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !