திருப்புல்லாணியில் ராமநவமி உற்ஸவ விழா
ADDED :2387 days ago
திருப்புல்லாணி:-திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலின் வலது புறம் தனி சன்னதியாக உள்ளபட்டாபிஷேக ராமர், தெர்ப்பசயன ராமருக்கு ராமநவமி உற்ஸவ விழா நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு சந்தான கோபாலகிருஷ்ணர் சன்னதி முன்புறம் உள்ள யாக வேள்வி இடத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடப்பட்டது. பின்னர் உற்சவமூர்த்தி களான லெட்சுமணர், ராமர், சீதா பிராட்டியார், அனுமன் ஆகியோருக்கு சாற்றுமுறை கோஷ்டி, பாராயணம், விஷேச திருமஞ்சனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன் செய்திருந்தனர்.