கம்மாபுரம் அரசியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
ADDED :2402 days ago
கம்மாபுரம்:கம்மாபுரம் அடுத்த இருப்பு பிடாரி அரசியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் (ஏப்., 13ல்) காலை 6:00 மணியளவில் கொடியேற்றமும், தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், காப்புகட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. தினசரி, காலை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 18 நாள் உபயதாரர்கள் சார்பில் இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.வரும் 27ம் தேதி இரவு 10:00 மணியளவில் அம்மன் திருக்கல்யாணம், இரவு 11:00 மணியளவில் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி காலை 5:00 மணிக்கு செடல் உற்சவம் ஆரம்பமாகிறது. மாலை 4:00 மணிக்கு அம்மன் திருத்தேர் உற்சவம் நடக்கிறது.