நெல்லிக்குப்பம் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள்
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார்.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அய்யப்பன் கோவிலில் அய்யப்பனுக்கு முன் பல்வேறு பழங்களை வைத்து, வழிபட்டனர். பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி வீதி உலா வந்தார்.மங்கலம்பேட்டை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மங்கலம்பேட்டை பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில், நேற்று (ஏப்., 14ல்)காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.அதேபோல், காட்டுப்பரூர் அதிகேசவ பெருமாள் கோவில், மு.பரூர் வரதராஜ பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.