தமிழ் புத்தாண்டு: கரூரில் கோலாகலம்
ADDED :2401 days ago
கரூர்: தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, கரூர் கோவில்களில் நேற்று (ஏப்., 14ல்) சிறப்பு பூஜை நடந்தது. தமிழகம் முழுவதும், நேற்று (ஏப்., 14ல்) தமிழ்புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கரூர் மாவட்டத்திலுள்ள கோவில்களில், சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், சுவேதா காயத்திரியின், தேவரா தமிழ் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
மேலும், கல்யாண வெங்கடரமணர் கோவில், மாரியம்மன் கோவில், புகழிமலை பாலதண்டாயுதபாணி கோவில், பாலமலை முருகன் கோவில்களில், தமிழ் புத்தாண்டை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், புதுமண தம்பதியர், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தமிழ் புத்தாண்டையொட்டி, பலர் வீடுகளில் கனிகள் காணும் நிகழ்ச்சி நடந்தது.