உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை தமிழ் புத்தாண்டில் பால் குட ஊர்வலம்

குளித்தலை தமிழ் புத்தாண்டில் பால் குட ஊர்வலம்

குளித்தலை: சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, காளியம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். தமிழ் ஆண்டு பிறப்பை யொட்டி, குளித்தலை அடுத்த, மேட்டு மருதூர் காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

முன்னதாக, கிராம பொதுமக்கள் சார்பில், 35ம் ஆண்டாக, காளியம்மன்கோவிலுக்கு, மருதூர் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால் குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். அதன் பின், சுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, அலங்கார வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !