உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி சிறப்பு நிகழ்ச்சி

கிருஷ்ணராயபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி சிறப்பு நிகழ்ச்சி

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் உள்ள, ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், ராம நவமி சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில், ராம ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

ராம நவமியை முன்னிட்டு, கடந்த, 12ல், இக்கோவிலில், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, ராமர் சீதா திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் (ஏப்., 13ல்) இரவு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கொடிக்கால் தெருவில், திருவீதி உலா நடந்தது. நேற்று (ஏப்., 14ல்) காலை, சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !