உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்

கரூர் மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்

கரூர்: கரூர் சின்ன ஆண்டாங்கோவில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்களின் பால் குட ஊர்வலம் நடந்தது. இக்கோவிலில் கடந்த, 12ல், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் (ஏப்., 13ல்) இரவு, அமராவதி ஆற்றில் இருந்து கரகம் ஊர்வலம் நடந்தது. நேற்று (ஏப்., 14ல்) காலை, அமராவதி ஆற்றில் இருந்து, பால் குடம், தீர்த்த குடங்களை, ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அதை தொடர்ந்து, அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, அம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !