அனுமனுக்கு பதில் சுக்ரீவன்!
ADDED :2574 days ago
தஞ்சை அருகே புன்னைநல்லூரில் உள்ளது கோதண்டராமர் திருக்கோயில். இங்கே கருவறையில் நின்ற கோலத்தில் அருளும் ராமர், லட்சுமணர், சீதை ஆகிய மூலவர் திருமேனிகள் சாளகிராமக் கற்களால் உருவாக்கப்பட்டவை. மேலும் அதே கருவறையில் ஆஞ்சநேயருக்கு பதிலாக பணிந்து நிற்கும் கோலத்தில் சுக்ரீவன் காட்சி தருவது விசேஷம். இந்தப் பழமையான கோயிலின் விக்ரகங்கள் சுமார் 1,400 ஆண்டுகள் பழமையானவை என்று சொல்லப்படுகிறது. ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, ஜெயந்தி போன்ற விழாக்காலங்களில் சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.