சாளகிராமத்தின் மகிமை!
ADDED :2574 days ago
கண்டகி என்ற பக்தை நீண்ட நாள் தவமிருந்து திருமாலே தனக்குக் குழந்தையாக அவதரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய, அதன்படியே கண்டகி நதியான அவளுக்குள் திருமால் அம்சமான சாளகிராமங்கள் உருவாகின என்பது புராணங்களின் கூற்று. இதை வைத்து பூஜிக்கும் வீடுகள், வைணவத் தலங்களுக்கு சமமான புனிதம் பெறுகிறது என்பது ஐதிகம்.