ஸ்ரீமுஷ்ணத்தில் புஷ்பாஞ்சலி உற்சவம்
ADDED :2404 days ago
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பிரஹந்நாயகி சமேத நித்தீஸ்வரர் சுவாமி கோவிலில் 14 ம் ஆண்டு புஷ் பாஞ்சலி உற்சவம் நடந்தது.முன்னதாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேள தாளங்கள் முழங்க பல்வேறு வகையான மலர்கள் ஊர்வலமாககொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நித்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். செயல் அலுவலர் மதனா, சி.எஸ்.ஜெயின் கல்வி நிறுவனங்களின் நிர்வாகி அபிராமி மகாவீர்சந்த், ரவிசுந்தர், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.