உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.நகர் ராமகிருஷ்ணா மடத்தில் கோடை சிறப்பு வகுப்பு

தி.நகர் ராமகிருஷ்ணா மடத்தில் கோடை சிறப்பு வகுப்பு

தி.நகர்:ராமகிருஷ்ணா மிஷன் மடம் சார்பில், கோடைக்கால சிறப்பு வகுப்புகள், மே, 5 முதல், 26 வரை, நடைபெற உள்ளது.இது குறித்து அவர்கள் அளித்துள்ள அறிக்கை:சென்னை, தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மடம் சார்பில், மே, 5ம் தேதி முதல், 26 வரை கோடைக்கால சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளன.

இதில், யோகாசனம், தியானம், பகவத்கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம், இந்திய கலாசாரம், பண்பாடு, ஆளுமைத் திறன் உள்ளிட்டவை கற்றுத்தரப்படும். இப்பயிற்சி வகுப்பில், 12 வயது
முதல், 16 வயதுக்குள் இருக்கும், மாணவ - மாணவியர் மட்டும் சேரலாம்.சிறப்பு வகுப்பிற்கான விண்ணப்பப் படிவம் தற்போது வழங்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவ - மாணவியர், விண்ணப்பப் படிவத்தை அவர்களே நேரில் வந்து பூர்த்தி செய்து, மே, 3க்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2841 2014 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !