ஓசூர் பிரத்யங்கிரா தேவி கோவிலில் வெளிநாட்டினர் சுவாமி தரிசனம்
ADDED :2409 days ago
ஓசூர்: கர்நாடக மாநிலம், கெங்கேரி பகுதியில், திருச்சி மகா சுவாமிகளின் சீடர் நடத்தி வரும் ஆசிரமத்தில் நடந்த, பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க, இத்தாலி நாட்டை சேர்ந்த மாரியோ சுவாமிஜி தலைமையிலான, 70க்கும் மேற்பட்ட சீடர்கள், கடந்த, 10ல் கெங்கேரி வந்தனர்.
ராம நவமி, தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின், திருச்சி மகா சுவாமிகளின் சீடர்களில் ஒருவரான சப்தகிரி அம்மா கட்டுப்பாட்டில் உள்ள, ஓசூர் மோரனப்பள்ளியில் உள்ள அதர்வன
பிரத்யங்கிரா தேவி கோவிலுக்கு, நேற்று முன்தினம் (ஏப்., 15ல்) காலை இரு பஸ்சில் வந்தனர். கோவிலில் சுவாமி தரிசனம் செய்த, வெளிநாட்டினர், அங்கிருந்து திருவண்ணாமலை புறப்பட்டு சென்றனர்.