உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் அசைந்தாடி வந்த அங்கயற்கண்ணி தேர்: பக்தர்கள் பரவசம்

மதுரையில் அசைந்தாடி வந்த அங்கயற்கண்ணி தேர்: பக்தர்கள் பரவசம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக துவங்கியது. பல்லாயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுக்க, மாசி வீதிகளில் தேர் பவனி நடக்கிறது.

சித்திரை பெருவிழா ஏப்.,8 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,15 மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.,16 மீனாட்சி அம்மன் திக்குவிஜயம் நடந்தது. பத்தாம் நாளான நேற்று, திருக்கல்யாண திருவிழா நடந்தது. விழாவின் பதினோராம் நாளான இன்று, தேரோட்டம் நடைபெறுகிறது. அலங்கரிப்பட்ட திருத்தேர்களில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுக்க, மாசி வீதிகளில் தேர் பவனி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !