உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் சித்ரகுப்த கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம்

காஞ்சிபுரம் சித்ரகுப்த கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம்

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோவிலில், சித்ரா பவுர்ணமி உற்சவம் விமரிசையாக நடந்தது. பக்தர்கள் கடுமையான வெயிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சித்ரகுப்த கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமியின்போது, சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அதன்படி இந்தாண்டு உற்சவம், நேற்று முன்தினம், காலை, 9:00 மணிக்கு நவகலச பூஜை, ஹோமத்துடன் துவங்கியது. இரவு, 8:30 மணிக்கு கர்ணகி அம்பாளுக்கும், சித்ரகுப்த சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவமும், அதை தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடந்தது.நேற்று காலை, 5:00 மணி முதல், சித்ரா பவுர்ணமி சிறப்பு தரிசனம் நடந்தது. இதில், கர்ணகி அம்பாளும், சித்ர குப்தரும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !