பழநி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
ADDED :2410 days ago
பழநி: பழநி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், சித்திரை திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. பழநி முருகன்கோயிலைச் சார்ந்த, ஸ்ரீ லட்சுமி நாராயணபெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 11 முதல் 20 வரை நடக்கிறது. விழா நாட்களில் பெருமாள் அனுமான், சஷேம் வாகனத்தில் ரதவீதியில் உலா வருகிறார். நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆதாரனை நடந்தது. காலை 7:15மணிக்கு லட்சுமி நாராயணப்பெருமாள் தேர்வடம்பிடித்து, நான்குரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. இரவு தங்கக்குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். ஏப்.,20ல் (இன்று) இரவு சப்பரத்தில் பெருமாள் திருவுலா வருதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்திருந்தனர்.